சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்

சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம் சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம் புராணமே எழுதும் அளவு நல்ல உணவு இது. இது இனிப்பாக இருந்தாலும், சாப்பிட்டவுடன் வயிறு திம் என நிறைவதாலும் இதை உண்டால் வெயிட் போடும் என தவறான நம்பிக்கை உள்ளது. ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் (நார்சத்து) அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். பைபர் கிழங்கு விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கபடுகிறது. இதில் கார்போஹைட்ரேட் இருந்தாலும் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வகையை சார்ந்த இயற்கையான சர்க்கரை உணவு. இன்ஃப்ளமேஷன் என சொல்லபடும் பிரச்சனையை தீர்க்கும் சூப்பர் ஃபுட் சர்க்கரைவள்ளி கிழங்கு. உங்கள் உடலில் சிகப்பு, சிகப்பாக தோலில் தடிப்பதுதான் இன்ஃப்ளமேஷன். என் உடலில் அப்படி எதுவும் இல்லை என நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்களுக்கே தெரியாமல் இன்ஃப்ளமேஷன் இருக்கும். இது சாதாரண மருத்துவ பரிசோதனையில் எல்லாம் தெரிய வராது. 21ம் நூற்ராண்டின் சைலன்ட் கில்லர் என இன்ஃப்ளமேஷன் அழைக்கபடுகிறது. இன்ஃப்ளமேஷன் உங்கள் நோயெதிர்ப...